Thursday, September 17, 2009

தியாக தீபம் திலீபனின் நினைவலைகள்



பகுத்தறிவு பலவும் கொண்டவன்
இளைய பருவத்தில் திளைத்தவன்
மருத்துவ பீடத்தின் மாணவன்
தமிழ் தாய்க்கு அருமை சேய் – அவன்

தமிழர் தம் கொடுமைகளை கண்டவன்
அவரிற்காய் போர் முனை சென்றவன்
தம் கைகளில் ஆயுதம் தாங்கியவன்
தலைவனின் தம்பியாய் ஆனவன் - அவன்

சிங்களத்தின் தமிழ் இனப்படுகொலை கண்டு
வீறு கொணடு எழுந்தது இந்தப்புலி
இந்திய நரிகளின் கபடத்தனத்தை துயிலுரிய
உண்ணாநிலை நோன்பை ஆரம்பித்தவன் – அவன்

தமிழர் தாயகத்தில் சிங்கள குடியேற்றம், காவல்துறை தமிழ் அரசியல் கைதிகள் சிறைப்பிடிப்பு தமிழனை அழிக்கும் அவசரகால சட்டம் ஊர் காக்கும் பெயரில் ஆயுதளுடன் சிங்களவன் போன்ற இனஅழிப்புகளை நிறுத்து என்று முழங்கினான் – அவன்

நல்லூர் கந்தனின் வீட்டினிலே
தானைத்தலைவனின் ஆசியுடன்
மக்கள் எல்லோரினதும் நலனிற்காக
தம்மையே உருக்க தயாரானான் – அவன்

தமிழ் தாய்க்கு ஒரு பார்த்தீபன்
ஈழத்தாய்க்கு ஒரு திலீபன்
தம்பிக்கு ஒரு அருமை தம்பி
மனிதத்திற்கோ ஒரு தியாக தீபம் – அவன்

இந்நிய நரிகளின் வேடம் கிழிக்க
ஜந்து அம்சக்கோரிக்கை முன் வைத்து
நீராகாரம் எதும் இன்றி முற்றும் துறந்தவராய்
தீபம் ஆகினான் பதினைந்து நாட்களில் – அவன்

தான் மாண்ட பின்னும் தன்னுடலை
பல்கலைக்கழகத்திற்கு உவந்தளித்த வள்ளலே
உன்னை விஞ்சியோர் எவருமுண்டோ
இவ்வுலகிற்கு ஒளியை தருபவனே

அன்னையின் மடியிலே நீ – 27-11-1963
மண்ணின் மடியிலே நீ – 26-9-1987
ஈழத்தாயின் மகவாய் நீ – என்றும் நிலைத்திருப்பாய்
மக்கள் போராட்டம் வெடிக்கட்டும்

No comments:

Post a Comment