Monday, September 14, 2009

பத்திரிகை

பத்திரிகை
இந்நோக்கங்களை நாம் செய்வது கடினமான காரியமல்ல. நாங்கள் வாழும் நாட்டு மக்களிற்கு எமது அவலங்களை கொண்டு செல்வதற்கு நாம் எடுக்கும் ஆயுதம் பத்திரிகை.
எவ்வாறு இப்பத்திரிகைகளை அணுகப்போகின்றோம்.
இலண்டனில் வசிக்கும் தமிழ உறவுகள் மிகவும் பிரசித்தி பெற்ற பத்திரிகைகளிற் ஆவணங்களுடன் எமது மக்கள் படும் அவலங்கள் தொடர்பாக தெரியப்படுத்தியதன் விளைவாக இன்று அவற்றால் ஏற்படும் மாற்றங்களைப்பற்றி உங்களில் பலர் அறிந்திருப்பீர்கள்.
அவற்றைப்போலவே ஒவ்வொருகிழமையும் எம்மவர்கள் மீது நடைபெறும் இனவாதங்களையும், அடக்குமுறைகளையும் பற்றிய செய்திகள் தினந்தினம் பிரசித்தி பெற்ற பத்திரிகைகளில் வருகின்றன.
அவற்றை ஒன்றாகக்கோர்த்து நீங்கள் வசிக்கும் நாடுகளில் கிடைக்கும் பத்திரிகைகளிற்கு அனுப்புங்கள். அதோடு எங்கள் பிரச்சினைகள் பற்றி தெரியாமல் பலர் இருப்பார்கள் அவர்களிற்காக சுருக்கமாக எழுதப்பட்ட எமது அவலம் பற்றிய சிறு கட்டுரையையும் வரைந்து அவர்களிற்கு தெரியப்படுத்துவதோடல்லாமல் தொடர்ச்சியாக அவர்களுடன் உறவை பேணுங்கள்.
இச்செயன்முறையை எம் உறவுகள் சிலர் செய்து கொண்டிருக்கின்றார்கள். முதலில் அவர்களிற்கு பத்திரிகையாளர்களிடமிருந்து பதில் கிடைக்கவில்லை. ஆனாலும் அவர்கள் மனம் தளரவிடாமல் தொடர்ந்து செய்த போது சில பத்திரிகை ஆசிரியர்கள் முன்வந்து எம்மவர் அவலங்கள் பற்றி இன்று எழுதிவருகின்றனர் என்பது முக்கியமான விடயமாகும்.
இச்செயன்முறை ஒவ்வொரு கிழமையும் தொடர்ந்து செய்யப்படல் வேண்டும்.

நாடாளுமன்ற உறுப்பினர்
எம்மில் அநேகமானோர் நாங்கள் வாழும் நாடுகளில் வாக்குரிமை அளிக்கும் தகுதி பெற்றவர்கள். ஆகவே நாங்கள் வசிக்கும் இடங்களில் இருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களை ஓவ்வொருவரும் சந்தித்து எம் மக்களிற்கு நடைபெறும் அவலங்களை சாட்சிப்பத்திரிகைகளின் உதவியுடனும், எங்களின் சொந்த உறவினர்கள் நிச்சயமாக பாதிக்கப்பட்டிருப்பார்கள் ஆகவே அவர்கள் பற்றிய தரவுகள் சகிதம் அவர்களை சந்திக்கவேண்டும். மற்றும் முக்கியமாக இப்பிரச்சினை எங்களை எவ்விதத்தில் பாதித்தது என்பது பற்றியும் அவர்களிற்கு தெரியப்படுத்த வேண்டும்.
ஒருமுறை தெரியப்படுத்துவதோடு நின்று விடாமல் தொடர்ந்தும் அவர்களை சந்தித்து முதற்கூறிய விடயங்கள் பற்றி ஏதாவது நடவடிக்கை எடுத்தார்களா? போன்ற விடயங்களை அறிவதோடு நின்று விடாது உங்கள் நண்பர்களிற்கும் இதனை தெரியப்படுத்தி மேற்கண்ட முறையில் செய்ய நாங்கள் ஒவ்வொருவருமே முயற்சிக்கவேண்டும்.

ஆனால் இந்நடைமுறையை சரிவரச்செய்வதற்கு ஆகக்குறைந்தது ஜந்து பேர் கொண்ட குழு போதுமானது. இவர்களின் கடமையானது....

· தாய் நாட்டில் கடந்த நாட்களில் நடைபெற்ற செய்திகள் பிரபல ஆங்கில நாளேடுகளிலிருந்து சேகரிக்கப்படல்.
· தமிழ் மக்கள் வசிக்கும் இடங்களிற்குப் பொறுப்பான பாராளுமன்ற உறுப்பினர் பற்றிய விபரங்கள் சேகரித்தல்
· எமது பிரச்சினை பற்றி தெரியாதவர்களிற்கு ஏற்ற விதத்தில் ஒழுங்கமைக்கப்பட்ட சுருக்கமான கட்டுரை ( எமது வரலாற்று சுருக்கத்துடன் கூடியதும் இன்று நடைபெற்ற பெரியளவிலான இனஅழிப்பினையும் உள்ளடக்கிய கட்டுரை)
· தமிழ் மக்களை தேர்ந்தெடுத்து பாராளுமன்ற உறுப்பினருடனான சந்திப்பு நேரத்தை தேர்ந்தெடுத்தல்.
· அவர்கள் சென்று சந்தித்தபின் கிடைக்கும் பதில்கள் போன்றவற்றை ஆவணப்படுத்தல்.

No comments:

Post a Comment