Thursday, September 17, 2009

தியாக தீபம் திலீபனின் நினைவலைகள்



பகுத்தறிவு பலவும் கொண்டவன்
இளைய பருவத்தில் திளைத்தவன்
மருத்துவ பீடத்தின் மாணவன்
தமிழ் தாய்க்கு அருமை சேய் – அவன்

தமிழர் தம் கொடுமைகளை கண்டவன்
அவரிற்காய் போர் முனை சென்றவன்
தம் கைகளில் ஆயுதம் தாங்கியவன்
தலைவனின் தம்பியாய் ஆனவன் - அவன்

சிங்களத்தின் தமிழ் இனப்படுகொலை கண்டு
வீறு கொணடு எழுந்தது இந்தப்புலி
இந்திய நரிகளின் கபடத்தனத்தை துயிலுரிய
உண்ணாநிலை நோன்பை ஆரம்பித்தவன் – அவன்

தமிழர் தாயகத்தில் சிங்கள குடியேற்றம், காவல்துறை தமிழ் அரசியல் கைதிகள் சிறைப்பிடிப்பு தமிழனை அழிக்கும் அவசரகால சட்டம் ஊர் காக்கும் பெயரில் ஆயுதளுடன் சிங்களவன் போன்ற இனஅழிப்புகளை நிறுத்து என்று முழங்கினான் – அவன்

நல்லூர் கந்தனின் வீட்டினிலே
தானைத்தலைவனின் ஆசியுடன்
மக்கள் எல்லோரினதும் நலனிற்காக
தம்மையே உருக்க தயாரானான் – அவன்

தமிழ் தாய்க்கு ஒரு பார்த்தீபன்
ஈழத்தாய்க்கு ஒரு திலீபன்
தம்பிக்கு ஒரு அருமை தம்பி
மனிதத்திற்கோ ஒரு தியாக தீபம் – அவன்

இந்நிய நரிகளின் வேடம் கிழிக்க
ஜந்து அம்சக்கோரிக்கை முன் வைத்து
நீராகாரம் எதும் இன்றி முற்றும் துறந்தவராய்
தீபம் ஆகினான் பதினைந்து நாட்களில் – அவன்

தான் மாண்ட பின்னும் தன்னுடலை
பல்கலைக்கழகத்திற்கு உவந்தளித்த வள்ளலே
உன்னை விஞ்சியோர் எவருமுண்டோ
இவ்வுலகிற்கு ஒளியை தருபவனே

அன்னையின் மடியிலே நீ – 27-11-1963
மண்ணின் மடியிலே நீ – 26-9-1987
ஈழத்தாயின் மகவாய் நீ – என்றும் நிலைத்திருப்பாய்
மக்கள் போராட்டம் வெடிக்கட்டும்

Monday, September 14, 2009

பத்திரிகை

பத்திரிகை
இந்நோக்கங்களை நாம் செய்வது கடினமான காரியமல்ல. நாங்கள் வாழும் நாட்டு மக்களிற்கு எமது அவலங்களை கொண்டு செல்வதற்கு நாம் எடுக்கும் ஆயுதம் பத்திரிகை.
எவ்வாறு இப்பத்திரிகைகளை அணுகப்போகின்றோம்.
இலண்டனில் வசிக்கும் தமிழ உறவுகள் மிகவும் பிரசித்தி பெற்ற பத்திரிகைகளிற் ஆவணங்களுடன் எமது மக்கள் படும் அவலங்கள் தொடர்பாக தெரியப்படுத்தியதன் விளைவாக இன்று அவற்றால் ஏற்படும் மாற்றங்களைப்பற்றி உங்களில் பலர் அறிந்திருப்பீர்கள்.
அவற்றைப்போலவே ஒவ்வொருகிழமையும் எம்மவர்கள் மீது நடைபெறும் இனவாதங்களையும், அடக்குமுறைகளையும் பற்றிய செய்திகள் தினந்தினம் பிரசித்தி பெற்ற பத்திரிகைகளில் வருகின்றன.
அவற்றை ஒன்றாகக்கோர்த்து நீங்கள் வசிக்கும் நாடுகளில் கிடைக்கும் பத்திரிகைகளிற்கு அனுப்புங்கள். அதோடு எங்கள் பிரச்சினைகள் பற்றி தெரியாமல் பலர் இருப்பார்கள் அவர்களிற்காக சுருக்கமாக எழுதப்பட்ட எமது அவலம் பற்றிய சிறு கட்டுரையையும் வரைந்து அவர்களிற்கு தெரியப்படுத்துவதோடல்லாமல் தொடர்ச்சியாக அவர்களுடன் உறவை பேணுங்கள்.
இச்செயன்முறையை எம் உறவுகள் சிலர் செய்து கொண்டிருக்கின்றார்கள். முதலில் அவர்களிற்கு பத்திரிகையாளர்களிடமிருந்து பதில் கிடைக்கவில்லை. ஆனாலும் அவர்கள் மனம் தளரவிடாமல் தொடர்ந்து செய்த போது சில பத்திரிகை ஆசிரியர்கள் முன்வந்து எம்மவர் அவலங்கள் பற்றி இன்று எழுதிவருகின்றனர் என்பது முக்கியமான விடயமாகும்.
இச்செயன்முறை ஒவ்வொரு கிழமையும் தொடர்ந்து செய்யப்படல் வேண்டும்.

நாடாளுமன்ற உறுப்பினர்
எம்மில் அநேகமானோர் நாங்கள் வாழும் நாடுகளில் வாக்குரிமை அளிக்கும் தகுதி பெற்றவர்கள். ஆகவே நாங்கள் வசிக்கும் இடங்களில் இருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களை ஓவ்வொருவரும் சந்தித்து எம் மக்களிற்கு நடைபெறும் அவலங்களை சாட்சிப்பத்திரிகைகளின் உதவியுடனும், எங்களின் சொந்த உறவினர்கள் நிச்சயமாக பாதிக்கப்பட்டிருப்பார்கள் ஆகவே அவர்கள் பற்றிய தரவுகள் சகிதம் அவர்களை சந்திக்கவேண்டும். மற்றும் முக்கியமாக இப்பிரச்சினை எங்களை எவ்விதத்தில் பாதித்தது என்பது பற்றியும் அவர்களிற்கு தெரியப்படுத்த வேண்டும்.
ஒருமுறை தெரியப்படுத்துவதோடு நின்று விடாமல் தொடர்ந்தும் அவர்களை சந்தித்து முதற்கூறிய விடயங்கள் பற்றி ஏதாவது நடவடிக்கை எடுத்தார்களா? போன்ற விடயங்களை அறிவதோடு நின்று விடாது உங்கள் நண்பர்களிற்கும் இதனை தெரியப்படுத்தி மேற்கண்ட முறையில் செய்ய நாங்கள் ஒவ்வொருவருமே முயற்சிக்கவேண்டும்.

ஆனால் இந்நடைமுறையை சரிவரச்செய்வதற்கு ஆகக்குறைந்தது ஜந்து பேர் கொண்ட குழு போதுமானது. இவர்களின் கடமையானது....

· தாய் நாட்டில் கடந்த நாட்களில் நடைபெற்ற செய்திகள் பிரபல ஆங்கில நாளேடுகளிலிருந்து சேகரிக்கப்படல்.
· தமிழ் மக்கள் வசிக்கும் இடங்களிற்குப் பொறுப்பான பாராளுமன்ற உறுப்பினர் பற்றிய விபரங்கள் சேகரித்தல்
· எமது பிரச்சினை பற்றி தெரியாதவர்களிற்கு ஏற்ற விதத்தில் ஒழுங்கமைக்கப்பட்ட சுருக்கமான கட்டுரை ( எமது வரலாற்று சுருக்கத்துடன் கூடியதும் இன்று நடைபெற்ற பெரியளவிலான இனஅழிப்பினையும் உள்ளடக்கிய கட்டுரை)
· தமிழ் மக்களை தேர்ந்தெடுத்து பாராளுமன்ற உறுப்பினருடனான சந்திப்பு நேரத்தை தேர்ந்தெடுத்தல்.
· அவர்கள் சென்று சந்தித்தபின் கிடைக்கும் பதில்கள் போன்றவற்றை ஆவணப்படுத்தல்.

நோக்கம்

· உடனடியாக எம்மக்களை விடுவிக்க சிறி லங்காவிற்கு அழுத்தத்தை கொடுக்குமாறு நாம் வாழும் நாடுகளை வேண்டுதல்.
· எமது ஈழத்தமிழரிற்கு எற்பட்ட அவலங்களை வேற்றினத்தவர்களிற்கு எடுத்துக்கூறல்.
· பத்திரிகை எழுத்தாளர்களிற்கு எமது அவலநிலை பற்றி எடுத்துக்கூறல்.
· நாங்களில் வாழும் நாடுகளின் பாராளுமன்ற உறுப்பினர்களை நெருங்கி எமது மக்களின் அவலங்கள் குறித்து தெரியப்படுத்துவதன் மூலம் அவர்கள் அந்நாட்டு பாராளுமன்றத்தில் எமது பிரச்சினை சம்பந்தமாக அந்நாட்டு அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்து எமது பிரச்சினைக்கு ஆதரவு நல்கும் நாடுகள் பட்டியலில் சேர்த்தல்.
· மற்றும் யுத்த குற்றவாளிகளை கூண்டில் நிறுத்தும் பொருட்டு பாதிக்கப்பட்ட மக்களின் ஆதாரங்களை திரட்டுதல்.

இளையோரின் கைகளில் கொடுக்கப்பட்டதால் கிடைக்கும் நன்மைகளையும், தீமைகளையும் நோக்கினோமானால்...

நன்மைகள்
· புலம் பெயர் உறவுகள் ஒவ்வொரு நாட்டிலும் பிறந்தவர்கள்
· அந்நாட்டில் பேசும் மொழிக்கு முதன்மைத்துவம் கொடுத்து அம்மொழியிலேயே கல்வி பயில்பவர்கள்.
· அவர்கள் தோற்றமும், உடை பாவனைகளும் அந்நாட்டிற்குரியவை.
· அவர்களை பொதுவாக போரட்டங்களில் ஈடுபடும் போது அந்நாட்டு மக்களின் கவனத்தை இலகுவாக ஈர்க்கக்கூடியவர்கள்.
· அந்நாட்டு மொழிகளில் புத்தகங்கள், கவிதைகள் எழுதும் திறன் படைத்தவர்கள்.
· அந்நாட்டு சட்டதிட்டங்களை சற்று தெளிவாக தெரிந்தவர்கள்.
· அந்நாட்டு மக்களை எவ்வாறு கவர்ந்து போராட்டத்தை கொண்டு செல்லவேண்டிய வழிமுறைகளை தெரிந்தவர்கள்.
· அவர்கள் படித்தபின் வேலைத்தளங்களிலும் சக தொழிலாளிக்கு இலகுவான முறையில் எமது போராட்டத்தினை எடுத்துப்கூறுபவர்கள்.
· கணனி, புதிய தொழில்நுட்பங்களை உடனுக்குடன் அறிந்து அவற்றின் ஊடாக எமது பிரச்சினைகள் பற்றி வேற்றின மக்களிற்கு தெரியப்படுத்தும் ஆற்றல் உள்ளவர்கள்.


தீமைகள்
· எளிதில் சில வதந்திதளை நம்பிவிடக்கூடியவர்கள்.
· சிலர் யௌவன பருவத்தின் கோளாறு காரணமாக போராட்டங்களில் கலந்து வேறு சில தீய காரணங்களிற்காகவும், கூடி மகிழ்வதற்காசவும் வருபவர்கள்.

ஆகமொத்தத்தில் இவர்களால் நன்மையே. தீமைகளை திருத்த முயல்வோம்.

ஆகவே இன்று எம்மால் எடுத்துச்செல்லக்கூடியவைகள் சிலவற்றை நோக்குவோம்.

நாம் இருக்கும் நாடுகளிலுள்ள பிரதேசங்களில் பல பத்திரிகைகள் வாரத்திற்கு இருமுறையோ அல்லது மும்முறையோ வெளியிடப்படுவது வழக்கம்.

நாளைய தமிழினம்

நாளைய தமிழினம்

வணக்கம் தோழர்களே,
எவ்வாறெல்லாம் இருக்கவேண்டும் என நினைத்து வாழ்ந்திருந்தோம் அன்று.
அவையெல்லாம் ஒரு நொடியில் தகர்த்தெறியப்பட்டதே இன்று.
உங்கள் எல்லோருக்கும் நேற்று நடந்ததும் இன்று நடந்துகொண்டிருப்பதும் நன்கு அறிவீர்கள். சிறைக்கூண்டுகளில் இன்று அடைபட்டும், சித்திரவதைகளிற்கு உள்ளாகியும் சொல்லொணாத்துயரங்களை அனுபவித்துக்கொண்டிருக்கின்றார்கள்,

· பல இளைஞர்கள் மர்மமான் முறையில் காணாமல் போகின்றார்கள்.
· விசாரணை என்ற பெயரில் அழைத்துச்செல்பவர்களில் பலர் இருப்பிடம் திரும்புவதில்லை.
· யுவதிகள் மட்டும் விதிவிலக்கல்ல. பாலியல் வன்முறைகளிற்கு உள்ளாக்கப்படுகின்றனர்.
· மற்றும் சிறுவர்களும் கூட பாலியல் தொழில்களிற்காகவும், கூலித்தொழில்களிற்கும் நாட்டின் பெரும்பான்மையான பகுதிகளிற்கு அழைத்துச்செல்லப்படுகின்றனர்.
· போராளிகள் என்ற பெயரிலும் அழைத்துச்செல்லப்பட்டவர்கள் சித்திரவதைகளிற்கு உள்ளாக்கப்பட்டு ஏற்படும் காயங்களாலும் தகுந்த மருத்துவவசதிகளுமின்றி இறக்கின்றனர்.
· 300,000 மக்கள் வதைமுகாம்களில் இருப்பதாக யுத்தம் முடிந்தபின் கிடைத்த தரவு.
· இவ்வெண்ணிக்கை சற்று மெதுவாகக்குறைந்து இன்று வரை 280,000 எண்ணிக்கை வெளியிடப்படுகின்றது.
· அதுமட்டும் அல்லாமல் வயோதிபர்கள், ஆதரவு அல்லாதோர் மருத்துவ வசதிகளின்றி உயிரிழக்கின்றனர்.
· இறுதிப்போரின் போது காயமடைந்தவர்கள் இன்றும் தகுந்த மருந்து வசதிகளின்றி அவயங்களை இழக்கும் நிலைக்குத்தள்ளப்பட்டுள்ளார்கள்.



இவ்வாறு ஈழத்தமிழர் படும் அவலங்கள் ஒன்றா, இரண்டா..... ஏன் நாங்கள் என்ன பாவம் செய்தவர்கள் இறைவா? என்று தணியும் எங்கள் சுதந்திர தாகம்?
என்று ஈழத்தமிழர்கள் தத்தம் இடங்களிற்கு செல்வார்கள்? எவ்வாறு எமது உரிமையை பெற்றுக்கொள்ளப்போகின்றோம்? நாங்கள் எப்போது எமக்குரிய நீதியை பெறுவோம்?

என்றெல்லாம் ஈழத்தமிழனுக்கு பல கேள்விகள் எழும் என நினைக்கின்றேன்.
இவற்றை எப்போது பெறுவோம் என்று இன்று கனவு காண்பதை விட இன்று நம் கண் முன்னால் எவ்வாறான பணிகள் விரிந்து கிடக்கின்றன என்பதை பல எழுத்தாளர்கள சுட்டிக்காட்டியிருக்கின்றார்கள்.

அவற்றை சோ்த்துச்சொல்வதாயின் இன்றைய போராட்டம் புலம் பெயர்தமிழர்களின் கைகளில் தாரைவார்க்கப்பட்டது. முக்கியமாக பணியாற்ற வேண்டியவர்கள் இளையவர்களே. அப்படியானால் வயது முதிந்தவர்கள் எவ்வாறு பங்களிப்புச்செய்ய முடியும்? அவர்கள் இளையோருக்கான தகவல்களை வழங்கல், களங்களை அமைத்துக்கொடுத்தல், வரலாறுகளை கற்பித்தல், கடந்த காலங்களில் எமது முன்னோர் இழைத்த தவறுகள், ஆயுத்ப்போராட்டம் எவ்வாறு ஈழத்தமிழரிடத்தில் கையளிக்கப்பட்டது போன்ற விடயங்களை இளையோரிற்கு பின் புலத்தில் நின்று உதவிகளைச்செய்யமுடியும்.

மற்றும் இன்றைய தேவையின் பொருட்டு புலம் பெயர் நாடுகளில் அரசியல் பரப்புரை போராட்டங்கள் நடைபெறுகின்றன, ஆனாலும் அவை எல்லா தரப்பினராலும் மேற்கொள்ளப்படுகின்றனவா என்று உற்று நோக்கின் இல்லை என்பதே விடையாகும்.

அதற்கு நாம் அவர்களை குறை கூறமுடியாது. அவர்களில் பலபேர்கள் கணனி பற்றிய அறிவு சற்றுக்குறைந்தவர்கள், கடின உழைப்பாளிகள்......
ஆகவே அவர்களிற்குரிய களங்களை பரப்புரைக்குழுவில் உள்ளவர்கள் அமைத்து கொடுக்கவேண்டும். இதே நேரம் பல தமிழ் உறவுகள் பல போராட்டங்களி கலந்து கொண்டும் எதுவித பலனும் ஏற்படவில்லையே என்ற தயக்கத்தில் இருக்கின்றார்கள் என்று அறியமுடிகின்றது.

அன்றைய காலத்தில் விடுதலைப்புலிகளுடன் சண்டை நடைபெற்றபோது நாங்கள் வீதியில் இறங்கிப்போராடினோம்.

Sri Lanka stop killing tamils
Sri Lanka stop the genocide of tamils
What we want? tamil eelam when we want? now
Tamil tigers freedom fighters
Our leader Prabhakaran
We want tamil eelam


போன்ற வாசகங்களை பறைசாற்றிய வண்ணம் நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் நாடுகளின் கவனத்தை ஈர்த்திருந்தோம். ஆனாலும் இன்று விடுதலைப்போராட்டம் அழிக்கப்பட்ட நிலையிலே மக்களைக்காப்பாற்றுமாறு கோரி ஏன் அன்று செய்த போராட்டங்களை போல் செய்யவில்லை என்ற கேள்விக்கான விடையை உங்களிடமே விட்டுவிடுகின்றேன்.

அதாவது இன்றைய போராட்டம் இளையோரின் கைகளில் கொடுக்கப்பட்டதால் கிடைக்கும் நன்மைகளையும், தீமைகளையும் நோக்கினோமானால்...