Thursday, August 27, 2009

கொஞ்சம் சிந்தனை செய்யுங்கள்

வணக்கம் தமிழ் உறவே
சில தினங்களிற்கு முன் சிறிலங்கா அரசின் தமிழினஅழிப்பை ஆதாரங்களுடன் ஒரு காணொலி ஒன்று ஆங்கில ஊடகமொன்றினால் வெளியிடப்பட்டது. இதனை நீங்கள் எல்லோரும் அறிந்து இருப்பீர்கள். சிறிதளவேனும் கோபப்பட்டிருப்பீர்கள். உங்களின் கோபம் விளங்குகின்றது.
கோபம் கொள்வதுடன் நின்றுவிடாமல் அவ்வாதாரங்களை எவ்வாறு அனைத்துலக நீதிமன்றங்களிற்கு எடுத்துச்சென்று எப்படியெல்லாம் இனவாதிகளிற்கு தண்டனை பெற்றுக்கொடுக்கலாம் என்று சிந்திச்சுச்செயற்படவேண்டிய கடமையும் நம்மிடம் இருந்தாகவேண்டும்.

அண்மையில் லண்டனில் வசிக்கும் என்னுடைய நண்பர்கள் சிலருடன் கதைக்கும் வாய்ப்பு எனக்குக்கிடைத்தது. உங்களையும் போல் சாதாரணமான கேள்விகளுடன் ஆரம்பமாகிய உரையாடல் தமிழினத்திற்கு ஏற்பட்ட அழிவினைப்பற்றியும் கதைத்துச்சிறிது நேரம் கூட ஆகவில்லை எனது நண்பன் என்னிடம் கூறிய வார்த்தை என்னைச்சிறிது நேரம் உறையவைத்தது. அவன் கூறிய வார்த்தை ” நீ என்னடாப்பா உனக்கு வேற வேலை வட்டி இல்லையா? அது தானே முடிந்து விட்டுது. பிறகென்ன இதைப்பற்றி ஒண்டும் யோசிக்காம உன்ர வேலையை பாரு

எமது இனம் அடக்கியாழப்பட்டுக்கொண்டுருக்கும் போதுதான் எம்மினத்தலைவன் எம்மைக்காக்க அவதாரம் கொண்டவன் என்று சொல்வதில் ஒரு பிழையும் இல்லை. அப்படியே எனது நண்பன் கூறியது போலவே தலைவனும் இவ்வாறே அலட்சியத்துடன் இருந்திருந்தால் இன்று நீ, நான் மற்றும் அனைத்துத்தமிழரும் இன்று உயிரோடு இருந்திருப்போமா என்பது கேள்விக்குறி தான்.
அவ்வாறு இருந்திருந்தாலும் நாம் அனைவருமே இன்று சிங்களவன்
கள்ளத்தோணி என்று எங்களைக்கூப்பிடும் போது மெல்ல நாணிச்சிரித்திருப்போம்.
கடிதக்காரன் வரும் போதும் அஞ்சி நடுங்கியிருப்போம்.
அதற்கும் மேலாக எங்களினுடைய பெயரின் பின்னெழுத்தை வெட்டிவிட்டு
சாரங்கன் அதாவது சாரங்க, ஆனந்ந, மயூர, ராகுல என்று சிங்களவனாகக்கூட நாம் மாறியிருக்க வாய்ப்புக்கள் உண்டு.
ஆகவே அன்று எமது தலைவனும் மாவீரர்களும் எனது நண்பன் நினைத்ததைப்போல் நினைத்துக்கொண்டு இருந்துவிடாமல் சிங்கள இனவெறியனிற்கெதிராகப்போராடினார்கள். எம்மினம் நடாத்திய ஆயுதப்போராட்டம் இன்று 20 நாடுகள் துணைகொண்டு நசுக்கப்பட்டதன் விளைவாக புலம்பெயர்வாழ் தமிழர்களாகிய எம்மிடம் தரப்பட்டது. அவற்றை எடுத்துச்செல்வதற்கு எம்மில் சில இளைஞர்கள் தயாராக இருக்கின்றார்கள். ஆனால் பல பேர் ஓடி ஒதுங்கி வாழ்கின்றார்கள். இவர்கள் குறித்த கவலைதான் எல்லோரையும் வாட்டுகின்றது.

ஆனாலும் சிங்கள இனவெறியனை யுத்த கூண்டில் ஏற்றுவது சாதாரணமான விடயமல்ல. அதற்கு நிறையவே பணபலம் தேவைப்படும். அதனையும் விட ஒற்றுமையே அதிகம் தேவை. ஆனாலும் புலம்பெயர் மக்களாகியவர்கள் பேதங்களை மறந்து ஒரு குடையின் கீழ் அணிதிரண்டு” ஒற்றுமையே பலம்” என்பதை எதிரிக்கு உணர்த்தவேண்டியது எமது கடமை அல்லவா ?


சிந்தியுங்கள் செயற்படுங்கள்

இக்காணொலியை பற்றி விபரிக்க வார்த்தைகள் இல்லை. தமிழனாகப்பிறந்தது இவ்வளவு கொடுமைகளை அனுபவிப்பதற்காகவா

தோழர்களே என் தேழியரே கொஞ்சம் சிந்தனை செய்யுங்கள்.

உங்கள் கண்முன்னே தமிழினம் அழிவதுகண்டு வீரத்துடன் விரையுங்கள்.

எங்கே பாட்டுப்பாடி கூத்தடிக்கவல்ல, தமிழருரிமைப்போராட்டத்திற்கு

நன்றி

No comments:

Post a Comment