Friday, August 21, 2009

கவலைக்குரிய விடயமாகும்

வணக்கம் நண்பர்களே,
இன்று நீங்கள் பார்த்தீர்களானால் இலங்கையின் பூர்வீகக்குடிகளாக தமிழ் மக்கள் இருக்கின்றார்கள் என்பது பல சான்றுகள் மூலம் கிடைக்கப்பட்டுள்ளது. இதைப்பற்றி எமது ஆய்வாளர்கள் பல நுால்கள் எழுதி இருக்கின்றார்கள். ஆனாலும் சமீபத்தில் கலாநிதி முருகர் குணசிங்கம் அவர்களால் வெளியிடப்பட்ட இலங்கையில் தமிழர் வரலாறு என்ற தலைப்பில் ஒரு முழுமையான வரலாறு (கி.மு. 300 கி.பி. 2000) காலப்பகுதியினை ஆதாரம் மூலமாக விரிவாக எழுதப்பட்டுள்ளது.
அதனை வாசிக்கும் வாய்ப்பும் எனக்குக்கிடைத்ததையிட்டு பெரும் மகிழ்ச்சி.
ஆனால் நான் இங்கு என்ன கூறவருகின்றேன் என்றால் நாங்கள் எமது வரலாறு பற்றியும், பண்பாடு, கலாசாரம் பற்றியும் கருத்திற்கொள்வதில்லை. ஒரு முக்கியமான காரணமாக மூன்று தசாப்தங்களாக நடைபெற்ற போரையும் கூறலாம்.

ஆனாலும் நாம் ஒன்றை மறந்து விட்டோம். ஒரு இனத்தில் பிறந்த மனிதன் தனது மூத்தகுடிகளின் வரலாற்றை படிப்பதன் மூலம் அவர்கள் விட்ட பிழைகளைத்திருத்தி நிகழ்காலத்தில் வாழ்க்கை பயணங்களை தொடர்கின்றான். ஆனால் எமது இனத்தை பொறுத்தவரையில் எமக்கு கடினமானதொன்றாகவே இருக்கின்றது. காரணம் சிங்களவன் எமது வரலாற்றுச்சான்றுகளை முழுமையாக மூடி மறைக்கின்றான். தமிழர்களின் அகழ்வாராய்ச்சிகளை நடாத்த விடும் பட்சத்தில் இலங்கை தமிழர்களின் நாடாகிவிடும் என்கின்ற பீதி தான்.

இதே நேரம் சிலர் பின்வருமாறு கூறுகின்றார்கள்.
ஆயுதப்போராட்டம் தொடங்கியிருக்காதிருக்கும் பட்சத்தில் தமிழர்கள் தங்கள் பிரதேசங்களிலேயே வாழ்ந்திருப்பர். அதன்மூலமாக கடைசி தமிழரின் பிரதேசங்களாவது வடக்கு, கிழக்கு பிரதேசங்கள் இருந்திருக்கும் என்பது அவர்களுடைய கருத்து. ஆனாலும் இன்று ஆயுதப்போராட்டம் மூலமாக தமிழர்கள் உயிர், சொத்து, பூர்வீகம் என்று எல்லாவற்றையும்
இழந்து எம்மினம் பசியாலும் பட்டிணியாலும் சிறைக்கூடாரங்களில் அடிப்படை வசதிகள் இன்று தினம் தினம் வீழ்கின்றார்கள்.
ஆனாலும் நாம் ஏன் ஆயுதப்போராட்டம் தொடங்கினோம்? அல்லது எமது கைகளில் கொடுக்கப்பட்டதா? என்ற நோக்கும் போது உண்மை தெளிவாக புலப்படும்.

சிங்கள இனவாதிகளினால் எமக்கு ஏற்பட்ட கொடுமைகள் கொஞ்சமல்ல. அவைகளை மனித சமுதாயமே ஏற்றுக்கொள்ள முடியாதவை. எமது பெண்கள் கணவன் முன்பே கற்பழிக்கப்பட்டாள், தீயிலிடப்பட்டாள், மற்றொரு பெண் மார்பகங்கள் அறுக்கப்பட்டாள், பாலியல் துன்புறுத்தல்கள் மூலம் கடும் சித்திரவதைகளிற்குள்ளாக்கப்பட்டு அவளின் முன்பே பிள்ளைக்கும் அதே கதைதான் நேர்ந்தது. இவ்வாறு கூறிக்கொண்டு போனால் தொடர்கதையாகும் எம்மவர் வாழ்க்கை.
இவை தான் எமது தலைவனை வீறுகொண்டெழச்செய்தன என்று கூறுவதில் ஒரு சந்தேகமும் இல்லை.

நீங்கள் யோசிக்கலாம் பல இயக்கங்களும் வீறுகொண்டெழுந்தனவே ஏன் அவர்களைப்பற்றிக்கூறவில்லையென்று. அவர்களும் கொதிப்படைந்து எழுந்தனர், ஆனாலும் தமது இலட்சியத்தை தவறவிட்டமையாலும் தாம் சென்ற பாதையிலிருந்து விலகி அந்நிய சூழ்ச்சியாளர்களின் வலையில் விழுந்தமையால் அவர்களால் எமது போராட்டத்தை நடாத்தமுடியவில்லை.அதோடு தமிழ் மக்கள் அனைவரினதும் ஏகோபித்த தெரிவே விடுதலைப்புலிகள் என்பது இன்று அனைவரிற்கும் உள்ளங்கை நெல்லிக்கனி போன்று தெட்டத்தெளிவாக விளங்கும். உதாரணமாக தமிழரின் சுயநிர்ணய உரிமை, தேசம், ஈழம் என்றெல்லாம் கதைகளைக்கட்டிய மற்றைய இயக்கங்கள் தமிழீழ விடுதலைப்புலிகளின் ஆயுதப்போராட்ட வீழ்ச்சிக்குப்பிறகு சிங்களக்கொடுங்கோல் ஆட்சியாளர்களுடன் சேர்ந்து நின்று ஈழம் என்ற பெயரைக்கூட மாற்றுமளவிற்கு செல்லாக்காசாக இருக்கின்றன என்பதை நீங்களே கண்கூடாக பார்ப்பீர்கள் என நினைக்கின்றேன்.

நான் சொல்ல வந்ததைவிட்டு ஏதோ அரசியல் பேசிக்கொண்டிருக்கின்றேன். அதற்கும் ஒரு காரணம் உண்டு எனக்கு பெரிதாக எழுதும் ஆற்றல் இல்லை. ஆனாலும் என் சகதோழர்களிற்கு எனக்கு தெரிந்த விடயங்கள் பற்றி கூற வேண்டும் என்ற ஆதங்கமே.

எமது பெற்றார்களும் ஒரு பெரும் பிழைகளை இன்று விட்டிருக்கின்றார்கள் அல்லது விட்டுக்கொண்டிருக்கின்றார்கள் அதாவது தமது பிள்ளைகளை வைத்தியத்துறைக்கும், பொறியியலாளர் போன்ற துறைகளில் படிக்கவைக்கின்றார்கள். எம்மவர் மத்தியில் வரலாற்றுத்துறை, அரசியல்துறை, பத்திரிகை செய்தியாளர், அரசியல் ஆய்வாளர் போன்ற துறைகளில் படிக்க வைக்க பெரும்பாலானோர்கள் விரும்புவதில்லை. தயவு செய்து பெற்றோர்களிடம் தாழ்மையாக வேண்டிக்கொள்வது நீங்கள் அவர்கள் சிறுவயதில் இருக்கும் போது உனது இலட்சியம் என்ன என்ற கேள்விக்கு பல வழிகளை தொடங்கிவிடுங்கள். அதாவது வைத்தியர், பொறியியலாளர் போன்றதுறைகளுடன் கூடிய மற்றும் பல துறைகளையும் கூறி அவர்களின் விருப்பத்திற்கேற்ற துறைகளைத்தேர்ந்தெடுப்பதற்கு அவர்களிடமே விட்டுவிடுங்கள்.

இன்று எம்மவர்களில் வரலாற்றாசிரியர்கள் போன்றோர் மிகக்குறைந்த அளவிலே உள்ளனர் என்பது கவலைக்குரிய விடயமாகும்.

ஆகவே சிந்தியுங்கள் செயற்படுங்கள்

No comments:

Post a Comment