Tuesday, August 24, 2010

இறைவனுக்கு நன்றி கூறுதல்.....

வணக்கம் உறவுகளே...
எமது இனம் சொந்தங்களை கொடிய போரில் இழந்து, கவனிப்பாரின்றி இருக்கின்றது. இன்று எம்மில் பலர் புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் வாழ்ந்துகொண்டிருக்கின்றோம். எம்நினைவுகள் அனைத்தும் எமது தாய்நிலத்திலும், தாய்நிலத்துஉறவுகளைப்பற்றிய நினைவுகளுடனேயே வாழ்கின்றோம் (ஒரு சில கைக்கூலிகளைத்தவிர)

காலை விடிந்தால் வேலைக்குச்செல்லவேண்டும். இரவு வேலை முடித்து வந்தபின் தான் வீட்டுக்கு வந்து சோறும் ஒரு கறியுடனும் சாப்பாடு. பிறகு நித்திரை. இப்படித்தான் எங்களின் வாழ்க்கை செல்கின்றது. யாரும் கேட்டால்
ஒரே பிசி (very busy) என்ற பதிலுடனே எமது வாழ்க்கை செல்கின்றது.

ஆனால் இவற்றிக்கு மத்தியிலும் கடவுளை (ஒரு சக்தி a form of energy) வணங்கிவிட்டுச்செல்லும் மரபை நான் கொண்டிருப்பதற்கும், வேலை முடிந்த பிறகு வீட்டிற்கு வந்து படுக்கைக்குச்செல்லும் போதும் இறைவனுக்கு(ஒரு சக்தி a form of energy) நன்றி கூறிவிட்டு படுக்கைக்கு செல்லும் பழக்கத்தை ஏற்படுத்தியவர் எனது அம்மம்மா.

அப்பாடலைத்தருகிறேன்..


கல்லாப்பிழையும் கருதாப்பிழையும்
கசிந்துருகி நில்லாப்பிழையும் நினையாப்பிழையும்
நின்னைந்தெழுத்தை சொல்லாப்பிழையும்
துதியாப்பிழையும் தொழாப்பிழையும்
எல்லாப்பிழையும் பொறுத்தருள்வாய் கச்சியேகம்பனே....

என்கின்ற பாடல் தான் இன்றும் என்நினைவில் உள்ளது.

ஆகவே இறைவனை (ஒரு சக்தி a form of energy) ஒருகணமாவது நினைந்துருகுவோமாக

நன்றி

No comments:

Post a Comment